போபால் அநீதி - தோழர் மோகன்


25 வருடம் கழித்து தீர்ப்பு வருகிறது ஆம் குற்றம் தான், இருந்தால் என்ன குற்றம் இழைத்தவர்கள் கோடீசுவர இந்தியர்கள் என்பதால் போனா போகுதுனு இரண்டாண்டு கால சிறை தண்டனை விதித்திருக்கிறது இந்திய நீதி மன்றம், இதில் வேடிக்கை இது தான் தீர்ப்பு வந்த சாய்ங்காலமே குற்றம்புரிந்த அனைவருக்கும் பிணை விடுதலை, பிறகென்ன அந்த நல்லவர்கள் (நயவஞ்சகர்கள்) கொன்றது இந்தியாவின் ஒற்றை கலங்கரை விளக்கான, இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்க பிறந்த ஒற்றை விடிவெள்ளியான, இந்தியாவின் பாதுகாப்பில் ஊழல் செய்த, தமிழீழ மக்களின் குரவளையை அறுத்த காங்கிரசின் தலைவர் ராஜீவ் காந்தியைவா? இல்லையே உழைப்பை மட்டுமே நம்பி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன வெறும் 8000(மொத்தம்: 22146 பேர்) சாமானிய இந்தியர்கள் மன்னிக்க இந்தியா என்ற நிலப்பரப்பில் வாழ்வதால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட இந்தியர்களை தானே, இதுக்கு இரண்டு ஆண்டே ரொம்பக் கூட...

அப்ப போபாலில் விசவாயு தயாரிக்க அனுமதி வாங்காமல், எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறையையும் சரிவர பின்பற்றாமல், Union Carbide யால் இயக்கி வந்த அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயு கசிவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட 2 லட்ச பொது மக்களுக்கும் இது தான் நீதியா? என்று நீங்க யோசிச்சாலோ,கேட்டாலோ, இது தான் பதில்,


இந்தியாவுல எப்பவுமே முதலாளிக்கு ஒரு நீதி, உழைப்பாளிக்கு ஒரு நீதி... அதிகாரம் படைச்சவனுக்கு ஒரு நீதி, அன்றாடங்காய்ச்சி ஒரு நீதி... அரசியல்வாதிக்கு ஒரு நீதி, அடிமை இந்தியனுக்கு ஒரு நீதி...

இது தான் இந்தியா! இது தான் இந்திய மக்களாட்சி!!!

இன்னோரு செய்தி, போபால் விசவாயு வழக்கில் முக்கிய குற்றவாளியான Union Carbide ன் இயக்குனர் இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இப்போ அமெரிக்க தீவுல Beer அடிச்சிட்டு மல்லாந்து படுத்துக்கிட்டு கனா கண்டுகிட்டுயிருக்கான் காவாளி, அவன ஒரு தடவக்கூட இந்தியா விசாரிக்கவில்லை. ஏன்டானு கேட்கீறிங்களா?

இந்திய பெரு முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும், அரசியில்வாதிகளுக்கும் நல்லாவே தெரியும், பெரும்பாலான இந்தியர்கள் எது நடந்தாலும்(இந்தியாவின் கிரிக்கெட் தோல்வியையும், புதுப்பட ரிலிசையும் தவிர்த்து) மனசுல வச்சுக்காம மறந்துறுவாங்கனு, அதே போல எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்லவுங்கனும் நல்லாவே தெரியும் அந்த அறிவாளிகளுக்கு...

ஏதோ சில விளங்காத பையபுள்ளைக பாதிக்கபட்டவங்களோடு சேர்ந்து எதிர்வினையோ, புரட்சியோ, போராட்டமோ நடத்தினா, கருணைக்கடல் இந்திய அரசு தன்னுடைய காவல் படையை ஏவி விட்டு சும்மா பட்டைய கிளப்பிருவாக, நாமும் அந்த நிகழ்வ அடுத்த நாள் செய்திதாள்ல படிச்சிட்டு சே! பாவம்யில்ல னு உதட்ட சுழிச்சிட்டு ராவணன் படத்துக்கு எப்ப முன்பதிவு(ரிசர்வேசன்) தொடங்குதுனு இந்திய நாட்டோட மிகமுக்கிய பிரச்சனையை கூட்டமா சேர்ந்து விவாதிச்சுட்டுயிருப்போம்....

சே! மெய்சிலிர்க்குது உலகத்தோட மிகப்பெரிய மக்களாச்சியோட ஒரு குடிமகன் நானு நினைக்கிறபோது.... பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு!!!

த்தூ!!!


கொஞ்சம் கூடவா நமக்கு சுரணையில்லாம போச்சு, இது எப்படி நீதியாகும், லட்ச லட்சமா சாமானியன் செத்தாலும் குற்றம் செய்தவன விசாரிக்க கூட செய்யாது நம்ம நீதிதுறை, அப்படியே தண்டனைக் குடுத்தாலும் காலையில இரண்டு வருட சிறை, சாய்ங்காலம் பணை விடுதலை, சீ! கேவலமாயில்ல, பகுத்தறிவு அற்ற விலங்குகள் கூட ஏத்துக்காது இப்படி ஓர் கேவலத்தை நீதியென்று, ஆனால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட நாம் ஏற்போம்! ஏன் என்றால் நாம் மெத்த படித்தவர்கள்! அடிமை வாழ்க்கையை ரசிப்பவர்கள்! சக மனிதனை சுரண்டுவதும், சுயநலமும் மனித இயல்புகள் என்று நம்பும் நல்லவர்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக இனப்படுகொலையே நடந்தாக்கூட, இலவசங்களையும் சலுகைகளையும் வாங்கிட்டு "மன்னிப்போம்! மறப்போம்!!!" என்ற உயர் கொள்கை கொண்ட சுத்தமான தியாகிகள்!!! நாம்

- தோழர் மோகன்

பதிவுலக நண்பர்களே. போபால் தளத்தில் வெளியிடப்படும் முதல் பதிவு இது. இதனை எழுதியவர் பதிவர் தோழர் மோகன். இதை இவர் அவரது "அடங்கா தமிழன்" வலைப்பூவில் 09-06-2010 ல் எழுதியது. உங்களுக்காக அது இங்கே தொகுக்கப் படுகிறது. உங்களிடமிருந்து நிறைய கருத்துரைகளையும், இது பற்றி எழுதும் ஆர்வத்தையும் எதிர் நோக்கி வெளியிடுகிறோம்.

7 comments:

Ramesh said...

வன்முறை
ஆர்ப்பாட்டம்
அடக்குமுறை
காவல்துறை
ஜனநாயகம் சிறைக்குள்
காந்தியம் சிரிக்கிறது
அகிம்சை எழுதப்பட்டிருக்கிறது....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அரசியல்வாதிக்கு தான் நீதி,


இது தான் இந்தியா...

Chitra said...

இந்தியாவுல எப்பவுமே முதலாளிக்கு ஒரு நீதி, உழைப்பாளிக்கு ஒரு நீதி... அதிகாரம் படைச்சவனுக்கு ஒரு நீதி, அன்றாடங்காய்ச்சி ஒரு நீதி... அரசியல்வாதிக்கு ஒரு நீதி, அடிமை இந்தியனுக்கு ஒரு நீதி...

..... "of the people, for the people, by the people" is gone. Now - "of the money, for the money, by the money."

போபால் said...

தோழர் மோகன் பதிப்பில் எழுதி இங்கு விடுபட்டு போன பத்தியையும் இணைத்திருக்கிறோம். படித்துப் பாருங்கள்

Umapathy said...

//இந்தியாவுல எப்பவுமே முதலாளிக்கு ஒரு நீதி, உழைப்பாளிக்கு ஒரு நீதி... அதிகாரம் படைச்சவனுக்கு ஒரு நீதி, அன்றாடங்காய்ச்சி ஒரு நீதி... அரசியல்வாதிக்கு ஒரு நீதி, அடிமை இந்தியனுக்கு ஒரு நீதி//

மக்களாச்சி வால்க

Thenammai Lakshmanan said...

Chitra sonathuthan Repeat...

Praveenkumar said...

பணமும் அரசியலும்தான்
நீதியின் இருகண்களாக உள்ளது..!
இதுக்குமேல என்னத்த சொல்லுறது...
நினைத்துப் பார்த்தாலே..
ரொம்ப வேதனையா இருக்கு..

பகிர்வுக்கு நன்றி நண்பரே..!

Post a Comment

Copyright © போபால்