ச்சீ, தூ, பேமானிங்களா...- ஜாக்கி சேகர்நம் மக்களுக்கு இருப்பது போல மறதி வியாதி மற்ற நாட்டு மக்களுக்கு உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை... எவன் வீட்ல எழவு விழுந்தா எனக்கென்ன என் வீட்ல டிவி சிரியல் ஒழுங்காதெரிஞ்சா போறும் என்று நினைப்பதுதான்... இந்தியா முழுதுமான மக்களின் தற்போதைய மனநிலை என்பேன்...

இந்தியாவின் மிகப்பெரிய சோகம் 1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான நச்சுபுகை... 5லட்சத்து 75 ஆயிரம் பேரை கண் பார்வை போய்...முச்சுதினறலில் பலர் சுவாசபாதிப்புக்குள்ளாக்கி மரித்து போக செய்தது.....

20,000 மக்களின் கனவுகள் சிதைக்கபட்டன....சுதந்திர இந்தியாவில் அமெரிக்க ஓநாய்கள் நம் மக்களை செல்லாகாசாக நினைத்ததன் விளைவு... 20,000ம் மக்கள் இறந்து போனார்கள்.... அது ஒரு தொழிற்சாலை விபத்து என்று சப்பை கட்டு கட்டியது அரசாங்கம்...இரண்டாம் தலைமுறை குழந்தை பிறப்பின் போது கூட குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர்.... இது எல்லாருக்கும் தெரிந்த சேதிதான்...


26 வருடங்களுக்கு பிறகு கொடுத்த தீர்ப்பில் இரண்டு வருட தண்டனை கொடுத்து விட்டு.. தண்டனை பெற்றவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வந்து இருக்கின்றார்கள்... அது அமெரிக்க கம்பெனி என்பது ஒரு காரணம்... பொதுவா பணம் இருக்கறவனுக்கு மட்டுமே இந்த உலகத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்...

இந்த சாபக்கேடு இந்தியாவில்மட்டும் அல்ல உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் பொருந்தும்...சிபிஜ விசாரனை சரியில்லை என்று எல்லோரும் குறைபட்டுக்கொண்டு இருக்கும் போது... இங்கு நமது பிரதமரே சரியில்லை எனும் போது எதையும் குற்றம் சொல்ல முடியாது...


அமெரிக்கா அதிபருக்கு ஆய் போவதில் ஏதாவது சிக்கல் என்றால் நமது பிரதமர் பயந்து போய்...இங்கிருந்து மருந்துகளை அனுப்பி... என்ன போயிடிச்சா? போயிடிச்சா? என்று ஆர்வம் காட்டுகின்றார்...

நம்ம பக்கத்துல இருக்கற சின்ன நாடு இலங்கை... நம்ம இந்திய மீனவன் கச்சை தீவு கிட்ட இலங்கை கடற்படையால் தினமும் செம மாத்து வாங்குறான்... அதை கேட்க துப்பில்லை, ஏன்டா அவனங்களை அடிக்கிறிங்கன்னு இந்திய கடற்படை இதுவரை கண்டித்ததாக சரித்திரம் இல்லை... சின்ன நாட்டையே கண்டிக்க துப்பில்லை...


அமெரிக்கா அதுவும் எவ்வளவு பெரிய நாடு அது என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்....அதிபருக்கும் துடைக்க பேப்பர் இல்லை தண்ணி இல்லை என்ற சின்ன வருத்தம் அவர் நாட்டில் விசனபட்டாலும் இவர் பொங்கி இரண்டு பிளைட்டில் பேப்பரும் சொம்பும் அனுப்பி வைக்கின்றார்....அவர்கள் சொல்வதே வேதவாக்காய் செயல் படுகின்றார்....

சரி இந்த தீர்ப்பு சொல்லும் சேசதி என்ன?

இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...
===========


20 ஆயிரம் பேர் சாவுக்கு காரணமானவனுங்களுக்கு 2வருட சிறை தண்டனை உடனே ஜாமீன்...

ராஜீவ் காந்தியும் கூட சிலர் இறந்து போனதுக்கு ஆயுட்கால சிறை.... ஆட்டோ சங்கர் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டான்? வீரப்பன் அப்படி என்ன தப்பு செஞ்சான்...எதுக்கு அவனுங்களுக்கு தண்டனை? இரண்டு வருட சிறையும் 25 ஆயிரம் அபராதம் கொடுத்து விட வேண்டியதுததானே...???
================


நிறுத்துக்கொட்டை தாண்டி வண்டி நிறுத்தினால் சாமானியனுக்கு ஸ்பாட் பைன்.....ஹெல்மெட் போடவில்லை என்றால்.. சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கு....

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, ஆட்சிக்கு வந்து, அரசு நிலத்தை வாங்கிய முதல்வருக்கு உச்சநீதி மன்றம் ஒரு கண்டனத்தை மட்டும தெரிவிக்கின்றது....
=================

சோ இந்தியாவில் திங் பிக்...குற்றத்திலும் .....

சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பண்ணாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் ஷல்பா தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை...
==========அரசியல்வாதிங்க ஒரு விஷயத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு ஒரு சீன் போட்டானுங்க பாருங்க.. அது செம காமெடி..

பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சுட்ட போது...ஐயோ இந்திய இறையான்னைமக்கு பெரிய வெட்கம் அது இது என்று பதறியது... அதுக்கு உடைந்தையானவங்களுக்கு தூக்கு.......

ஆனா 20 ஆயிரம் பேர் செத்ததுக்கு 2வருட தண்டனை....அதே போல் இந்தனை பேர் இறந்த வழக்கு விசாரனை சாதாரன ஒரு நீதி மன்றத்தில் நடக்கின்றது...

ரோட்டில் போகும் போது நடக்கும் சாமானிய மனிதருக்குள் நடக்கு சண்டையில் கூட ஒரு நியாயம் இருக்கின்றது..ஆனால் நீதி மன்றம் போய் கேட்க நினைக்கும் நியாங்கள்... கோர்ட்டில் பிரிட்டிஷ்காரன் போட்டு விட்டு போன பழைய பேனிலேயே தூக்கு போட்டு தொங்கிவிடுகின்றன...இப்போதெல்லாம் நீதி.... நீதி மன்றங்களில் கதறகதற வன்புனர்ச்சி செய்து அனு அனுவாக கொலை செய்கின்றார்கள்..ங்கோத்தா உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களாடா? அங்க இரண்டு தலைமுறையா அப்படிதான் இருக்கு....
=========
பல கோடி வழக்குகள் இந்தியாவில் தேங்கி கிடக்கின்றன.. சாமனிய மக்கள் தீர்பை எதிர்பார்த்து காத்து இருக்க....
எல்லாத்துக்கும் நீதி சொல்லும் நீதிபதிகள்.. வெள்ளைகாரன் காலத்தில் நீதி மன்றத்துக்கு கோடை விடுமுறை விட்டது போல் இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம்.. அது பற்றி 2008ம் வருடத்தில் நான் அப்போது எழுதி யாராலும் படிக்காமல் போய் விட்ட பதிவு இங்கே..கிளிக்கவும்
========
இது போலான நீதிகள் இந்தியாவில் கிடைக்கபெற்றால்... மா துஜே சலாம்.... என்று பாடும் போதும் ஜனகனமன பாடும் போது என் உடலில் ரோமங்கள் சிலிர்க்கும்...அது போல பல இந்திய குடிமகன்களுக்கும் சிலிர்க்கும்...அந்த சிலிர்ப்பை இது போலான தீர்ப்புகள் கொடுத்து சிலிர்க்காமல் செய்து விடுவார்கள் போல......
========
இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...

-ஜாக்கி சேகர்

பி.கு: இது 09-06-2010 அன்று நண்பர் ஜாக்கி சேகர் அவரது பிருந்தாவனமும் நொந்தகுமாரனும் என்ற வலைப்பூவில் எழுதியது. உங்களுக்காக இங்கு மீள்பதிவு செய்யப் பட்டிருக்கிறது.

8 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

இதை போல மாதவராஜ் காமராஜ் போன்றவர்களும் எழுதி இருக்கிறார்கள் என்று
நினைக்கிறேன் புலிகேசி , முடிந்தால் அந்த கட்டுரைகளையும் போடவும்
போபால் பற்றிய அணைத்து கட்டுரைகளுக்கும் பொது வெளியாய் இருக்கட்டும்

Anonymous said...

//========
இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...//

ஒரிஜினல் கட்டுரையிலிருந்து மேலே உள்ள வரிகளை எடிட் செய்யும் உங்களது நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இப்படி அமெரிக்கா என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டிகிட்டு,கை குலுக்க போகும் அரசியல்வாதிகளை என்னன்னு சொல்ல ?

இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருவதே நம் சட்டத்தின் சில ஓட்டைகளை பயன்படுத்தத்தான் என்று நினைக்கிறேன்

வந்தால் எல்லாம் லாபம்,போனால் இந்திய உசுறுதானே என்ற அலட்சியம்

போபால் said...

//ஒரிஜினல் கட்டுரையிலிருந்து மேலே உள்ள வரிகளை எடிட் செய்யும் உங்களது நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... வாழ்த்துக்கள்//

சுடியமைக்கு நன்றி நண்பரே. அந்த வரிகளை சேர்த்து விட்டேன்.

carthickeyan said...

ஜாக்கி அண்ணே புரட்சி தலைவர் சொன்னமாதிரி
வலிமை உள்ளவன் வச்சதெல்லாம் சட்டம் ஆகாது தம்பி. பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகனும் தம்பி

இது நடக்குமா !!!!!!

அப்பாதுரை said...

என்ன செய்யலாம்னு சொல்றீங்க?

புலவன் புலிகேசி said...

//அப்பாதுரை said...
என்ன செய்யலாம்னு சொல்றீங்க?//

புரிந்து கொள்ளுங்கள். விழிப்போடிருங்கள்.

LOSHAN said...

ரௌத்திரம் பழகு.
தலைவிதி..
உங்களுக்கும் எங்களுக்கும்

Post a Comment

Copyright © போபால்