அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே - அரசூரான்

அமெரிக்கா அடுத்த நாடுகளை நடத்தும் விதத்தை பார்த்தால் எனக்கு உடன் நினைவிற்க்கு வரும் முதியோர் மொழிதான் ”அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே”. மிகவும் சுவராசியமான சொல்வழக்கு/சொலவடை இது.

அடுத்த வீட்டில் இருந்து வரும் நெய்வாசனையை மோப்பம் பிடித்து, அதை சாப்பிட வேண்டி தன் மனைவியின் கையை விட்டு கவர்ந்து வரச்சொல்லும் கணவனின் மனப்போக்கு. கவர்ந்து வந்தால் மனைவியின் கையோடு நக்கிக் கொள்ளலாம், ஒருவேளை மனைவி நெய் திருடுவதை கண்ட அடுத்த வீட்டுக்காரன் மனைவியின் கையில் அடித்தால் மனைவியின் கைதானே நமக்கென்ன ஆச்சு என்று இருந்து விடலாம் என்ற எண்ணம்.

அமெரிக்கா அல்லாத நாடுகளின் காற்றுத் தூய்மை பற்றி வாய் கிழியப் பேசும் அமெரிக்காதான் அதற்காண காரணகர்த்தா என்று அதற்க்கு நன்றாகவே தெரியும். அது தன் நாட்டின் நலன் கருதி அதிகச் சுகாதாரக்கேடு விளைவிக்கும் தொழிற்ச்சாலைகளை வெளி நாட்டிற்கு மங்கள வாத்தியத்துடன் கொடுத்துவிடும் (என்ன ஒரு நல்ல எண்ணம்). மங்கள வாத்தியம் என்று நான் குறிப்பிடுவது அந்த தொழிற்ச்சாலை தொடங்குவதற்காண எந்திரம், பண உதவி மற்றும் தொழில் நுட்பம் என பலவகையில். அதை பெற்றுக்கொள்ளும் நாடுகளும் ( மஞ்சள் தண்ணீரும் மாலையும் இடப்பட்ட ஆடு தான் வெட்டப்பட போகிறோம் என்பது அறியாமல் தலையாட்டி வருவது போல் ) தன் நாட்டின் பொருளாதார வறுமையிலிருந்து விடுபட தெரிந்தோ தெரியாமலோ அந்த தொழிற்ச்சாலைகளை நிறுவ தங்கள் நாட்டிற்க்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க்கின்றன.

உதாரணத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள், தோல் பதனீடு மற்றும் சாயத் தொழில்கள். சீனாவில் தயாராகும் விளையாட்டுப் பொருட்களில் காரீயத்தின்(லெட் கன்டண்ட்) அளவை கண்டு அவற்றை தடைசெய்யும் அமெரிக்க அரசு அதை தயாரிக்கச் சொல்லும் நிறுவனங்களையோ, முதலாளிகளையோ ஒன்றும் சொல்லாது. தமிழகத்தில் திருப்பூர் மற்றும் வாணியம்பாடியில் சாயம் மற்றும் தோல் கழிவுகளால் மாசுப்படும் சுற்றுச் சூழலையும், குடிக்க பயணற்றுப் போகும் நிலத்தடி நீரையும் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்கு வந்துசேரும் ஆடை மற்றும் தோல் பொருட்களின் தரக்கட்டுபாட்டில் மட்டுமே கவலைப்படும்.

இப்படி தன் நாட்டின் தரக்கட்டுப்பாட்டிற்க்காக கவலைப்படும் அமெரிக்கா பல்லாயிரக்கணக்காண உயிர்களின் பலிக்கும், அதனால் இன்றுவரை ஏற்பட்டுக்கொண்டிருக்கும் சுகாதாரக் கேட்டிற்க்கும், இருபது ஆண்டுகளாக சரியான நீதிக்காக போராடிக் கொண்டிருப்போருக்காகவும் என்ன செய்தது?

பால் பால் போபால்

இன்றைக்கு செத்தால்

நாளைக்குப் பால்

போபாலில் செத்தால்

தேவையில்லை கள்ளிப்பால்

என்று போபாலில் ஒருவேளை பாலுக்கு அழும் குழந்தைக்கு பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றது. யூனியன் கார்பைட் நிறுவன தயாரிப்புகளை பெரிதும் அனுபவித்தது அமெரிக்கா தானே? தயாரிப்புகள் மட்டுமா? ஐம்பதியொரு சதவிகித பங்குகளை வைத்துக்கொண்டு 170 மில்லியன் அமெரிக்க டாலரை வருமானமாக ஈட்டிய பொழுதுவரை அது அமெரிக்க நிறுவனம். 1984-ல் பல்லாயிரம் இந்தியருக்கு சங்கு ஊதியபின் 1987-ல்அமெரிக்க நீதித்துறை சொல்கிறது அது தனிப்பட்ட, இந்திய குடிமக்கள் வேலைசெய்யும், இந்திய குடிமக்களால் நிறுவகிக்கப்பட்ட நிறுவனம், எங்களுக்கும் அதற்க்கும் பொருப்பு இல்லை என்று.

இன்று, அமெரிக்காவின் கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ-வில், பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் ஆழ்குழாய் எண்ணைக் கிணற்றில் (ஏப்ரல், 2010) ஏற்ப்பட்ட துவாரத்தினால் சிலர் (11 பேர்) உயிரிழந்து, மேலும் எண்ணைக்கசிவு ஏற்ப்பட்டு சுற்றுப்புறச் சுகாதாரக்கேடு ஆனதால் அதை உடனே இராணுவத்தினர் உதவிகொண்டு துடைக்கிறது, இன்றும் துடைத்துக்கொண்டு இருக்கின்றது. ஏன்? காரணம் இவ்விபத்து நிகழ்ந்தது அமெரிக்க மண்ணில், பாதிக்கப் பட்டது அமெரிக்க மக்கள், அது மட்டுமா? எண்ணை நிறுவனமோ ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தது (அண்டை வீட்டு நெய்). பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் இந்த விபத்திற்க்கு (சிந்திய எண்ணையை நக்கித் துடைக்க) செலவிட்ட தொகை சுமார் 32 பில்லியன் அமெரிக்க டாலர். அமெரிக்காவிற்க்கு பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனம் வெரும் பெண்டாட்டி கையே, வலித்தால் என்ன வீங்கினால் என்ன?

எண்ணை சிந்தியதற்க்கு இவ்வளவு பாடுபடும் அமெரிக்கா, இந்திய மண்ணில் – போபாலில் சிந்திய இரத்தத்திற்க்கும், சிதறிய் உயிருக்கும் கவலைப்படாது கண்டனத்திற்க்கும் வருத்தத்திற்க்கும் உரியது.

பிறர்கின்னா முற்ப்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்ப்பகல் தாமே விலையும்

2 comments:

easyjobs said...

தயவு செய்து எழுத்துப்பிழை இல்லாமல் பதிவு செய்யவும்.

Anonymous said...

Well Said. People in US worry about their dogs and other pets. But not people in other countries.

Post a Comment

Copyright © போபால்